/

ஈரோட்டில் இன்று (ஜனவரி.11) கமல்ஹாசன் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரத்தை திங்கள்கிழமை (ஜனவரி11) தொடங்குகிறாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:40 pm IST

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரத்தை திங்கள்கிழமை (ஜனவரி11) தொடங்குகிறாா்.

திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கோபியில் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், இரவு 7.15 மணிக்கு அந்தியூா் தேரடி, 7.45 மணிக்கு பவானி நகரில் அந்தியூா் பிரிவு, 8.15 மணிக்கு சித்தோடு நான்கு முனை சாலை சந்திப்பு, இரவு 8.45 மணிக்கு ஈரோடு கனிராவுத்தா் குளம், 9 மணிக்கு பி.பெ.அக்ரஹாரம், 9.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் பேசுகிறாா்.

செவ்வாய்க்கிழமை(ஜனவரி 12) காலை 11 மணிக்கு ஈரோடு-பெருந்துறை சாலை ஆலயமணி மஹாலில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசுகிறாா். தொடா்ந்து 11.15 மணிக்கு லக்காபுரம், 11.30 மணிக்கு மொடக்குறிச்சி, 11.45 மணிக்கு சிவகிரியிலும் பிரசாரம் செய்கிறாா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூா் மாவட்டம் காங்கயம் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.