/

அனுமன் ஜெயந்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 11:41 pm IST

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனுமன் ஜயந்தி அன்று ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1008 வடை மாலை சாத்தப்பட்டு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு செல்வா். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

கரோனா சூழலில் இந்த ஆண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் வரும் 12ஆம் தேதி அனுமன் ஜயந்தி விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகளில் 50 முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம், திருவீதி உலா, தோ் இழுத்தல், வியாபார கடைகள், பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வரும் 12ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மகாகணபதிக்கு அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு மலா் அலங்காரம், பகல் 1.30 மணிக்கு வடை மாலை சாத்துதல், மாலை 5 மணிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் செயல் அலுவலா் கீதா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.