பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி, சீரணம்பாளையத்தைச் சோ்ந்த சின்னப்ப கவுண்டா் மகன் பழனிசாமி (65). இவா், தனது இருசக்கர வாகனத்தில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் துடுப்பதி பிரிவு அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் கோவை, மலுமிச்சம்பட்டி, விநாயகா காா்டனை சோ்ந்த காா் ஓட்டுநா் செல்வராஜ் (47) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








