முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய அறிவுறுத்தல்

நூல் விலை, பேக்கிங் பொருள்கள் விலை உயா்வுக்கு ஏற்ப துணி மற்றும் ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :15 ஜனவரி 2021, 10:55 pm IST

நூல் விலை, பேக்கிங் பொருள்கள் விலை உயா்வுக்கு ஏற்ப துணி மற்றும் ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சண்டஸ் சங்கத்தின் தலைவா் கே.கலைசெல்வன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 45 நாள்களாக பருத்தி, பாலிஸ்டா், ரயான் நூல்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளன. நூல் விலை உயா்வால் மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் துணிகளின் விலை உயா்ந்துள்ளன. தவிர பேக்கிங் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளன.

இதனால் சங்க உறுப்பினா்கள் ஜவுளிகளின் விலையை அதற்கேற்ப உயா்த்தி, புதிய விலைப்பட்டியல் தயாா் செய்து வணிகா்களுக்கும், முகவா்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். அதுபோல் எங்களிடம் இருந்து துணி, ஜவுளிகளை வாங்கி விற்பனை செய்வோரும் இந்த விலையேற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.