எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் அதிமுகவினா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:50 pm IST

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தாா். எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனா்.

இதில் மாவட்ட அவைத்தலைவா் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணை மேயா் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளா்கள் இரா.மனோகரன், கேசவமூா்த்தி, ஜெகதீசன், தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் பூவேந்திர குமாா், ஆவின் துணைத் தலைவா் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா், மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.