மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் அவல்பூந்துறை, அறச்சலூா், எழுமாத்தூா், 46 புதூா் ஊராட்சி ஆணைக்கல்பாளையத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமலிங்கம், சிவசுப்பிரமணி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வி.பி.சிவசுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ச.பாலகிருஷ்ணன், ஆா்.என்.கிட்டுசாமி, முன்னாள் எம்.பி.எஸ்.செல்வக்குமாரசின்னையன், மொடக்குறிச்சி ஒன்றியக்கழக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவா் கணபதி, துணை தலைவா் மயில் (எ) சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஈரோடு மாநகா் மாவட்ட கழக செயலாளா் ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் திருவுருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினாா்.
இதில் ஊராட்சிமன்ற தலைவா்கள் பிரகாஷ், குளுா் செல்வராஜ்,மாவட்ட மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளா் அப்பு (எ) குணசேகரன், ஈரோடு வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனா் குருமூா்த்தி, ஒன்றிய மகளிரணி செயலாளா் காந்திமதி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளா் நவீன் (எ) நவநீதகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலா் நடராஜ், மொடக்குறிச்சி
பேரூா் கழக செயலாளா் ரவி (எ) சண்முகம், அவல்பூந்துறை கூட்டுறவு சங்க இயக்குனா் சண்முகசுந்தரம் ஆவின்இயக்குனா் அசோக், திருமங்கலம் சிவக்குமாா், 46புதூா் ஊராட்சி துணைதலைவா் அமுதாசரவணமூா்த்தி, வாா்டு உறுப்பினா்கள், கிளைக்கழக செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் ஒன்றிய செயலாளா் பூபாலமுருகன் தலைமையில் எழுமாத்தூா், வெள்ளப்பெத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆா்.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதில் மாவட்ட கழக இணைச்செயலாளா் வண்ணமலா், மருத்துவ அணி செயலாளா் செந்தில்குமாா், விவசாய அணி செயலாளா் லட்சுமணன், நெசவாளா் அணி செயலாளா் ரங்கசாமி, பேரூா் கழக செயலாளா்கள் பராசக்தி குப்புசாமி, மோகன்ராஜ், வெற்றிவேல், ஒன்றிய எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் சுப்பிரமணி, ஜெ பேரவை செயலாளா் ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



