
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவு - புகைப்படங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவு - புகைப்படங்கள்

அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலப் பூஜை இன்று (அக்டோபர் 02) நிறைவுப் பெற்றது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிறைவுப் பெற்ற மகாகும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி விழா.

மண்டலப் பூஜை நடைபெற்று வந்த நாட்களில் தினமும் சுமார் 40,000 முதல் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 11 ஆம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு இன்று மண்டல பூஜை நிறைவு பெற்றது.

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவின் நிறைவை முன்னிட்டும், தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுர நுழைவுவாயில்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவுவாயில்கள் வழியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





