பீட்சா பாய்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
பீட்சா பாய்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பீட்சா பாய்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்பில் சங்கர் மற்றும் சஹானா சங்கர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் பீட்சா பாய்ஸ்.

சேகர் கேசவ் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் சிவம் சங்கர் நாயகனாகவும், நாயகியாக அல்பியா சிக்கந்தர் நடித்துள்ளனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் சரத் லோகிதாஸ்வாவும், காவல் ஆய்வாளர் நாகராஜ் வேடத்தில் ஷோப்ராஜும் நடித்துள்ளனர்.

அருள், ஜிமிகிலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீ சாஸ்தா இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க பெங்களூருவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 42 நாட்களில் நிறைவடைந்துள்ளது.

பீட்சா பாய்ஸ் திரைப்படம் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

நட்பு, லட்சியம், நகைச்சுவை மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பீட்சா பாய்ஸ்.

எந்தவிதமான பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் தங்களது கனவை நோக்கிப் பயணிக்கும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

