
ஆதியை முத்தமிட்டு வாழ்த்திய இசையமைப்பாளர் தேவா - புகைப்படங்கள்
ஆதியை முத்தமிட்டு வாழ்த்திய இசையமைப்பாளர் தேவா - புகைப்படங்கள்

மீசைய முறுக்கு-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதியை முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார்.

கானா கலைஞர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் அவர்களின் மனவலிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கானா பாடல்களுக்குத் தனி அடையாளத்தையும் பெற்றுத் தந்த இசையமைப்பாளர் தேவா, இப்படத்தைப் பார்த்துவிட்டு ஆதியை நேரில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டுப் பாராட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவா தன்னை முத்தமிட்டு வாழ்த்திய படங்களை ஆதி பகிர்ந்தும், 'இது போதும் எனக்கு... இது போதுமே...' என்ற வரிகளைப் பதிவிட்டு தேவாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





