மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து - புகைப்படங்கள்

லக்னோவிலிருந்து வந்த சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated on
அதிகாலை 5.30 மணி அளவில் தண்டவாளத்தில் நின்றிருந்த சுற்றுலா ரயில் தீ விபத்தில் சிக்கியது.

முதலில், ஒரு பெட்டியில் பிடித்த தீ அடுத்தடுத்த பெட்டிகளில் பற்றிக்கொண்டதாக தெரிகிறது.

ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் இந்த தீ விபத்தில் பலியாகினர்.

லக்னோவிலிருந்து ஐஆர்சிடிசி ஆன்மிக சுற்றுலா ரயிலில், 180 பயணிகளுடன், பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக மதுரைக்கு அதிகாலை 5.15 மணிக்கு வந்தடைந்தனர்.

ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரயில் பெட்டிகளிலிருந்து வெளியேறினர்.

தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டி, சுற்றுலா ரயிலின் ஒரு பெட்டியாகும்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், பொது மக்களும் இணைந்து தீயை அணைத்தனர்.

உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பயணிகள் என்பது  தெரியவந்துள்ளது.

தண்டவாளத்தில் அமர்ந்திருக்கும் சுற்றுலா பயணிகள்.

பயணி ஒருவர் ஸ்டவ்வைப் பற்ற வைத்து டீ தயாரித்த போது, தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com