தில்லியில் யமுனை ஆற்றின் நீர் மட்டம், அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயரப்பட்டு வருகின்றனர்.
புதுதில்லியில் உள்ள யமுனை ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்கின்றனர்.