புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

5.7.1976: வார்னிஷ் குடித்து சென்னையில் 60 பேர் சாவு

வார்னிஷ் குடித்து சென்னையில் 60 பேர் மரணமடைந்தது பற்றி...

News image

5.7.1976 - Dinamani

Updated On :5 ஜூலை 2026, 4:52 am IST

சென்னை, ஜூலை. 4 - வார்னிஷ் குடித்ததன் விளைவாக சென்னையில் இன்று 5 பெண்கள உட்பட 60 பேர் உயிரிழந்தனர். இன்றிரவு 12 மணி வரை நகரிலுள்ள 6 ஆஸ்பத்திரிகளிலும் 6 பெண்கள் உட்பட 85 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விஷமதுவை விற்றதாகக் கூறப்படும் 4 பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மற்ற இருவர் விஷ மதுவுக்கு பலியாயினர்.

போலீஸ் கமிஷனர் நகரிலுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

பொது மருத்துவமனையைத் தவிர ஏனைய மருத்துவமனைகளில் மேலும் அனுமதிக்க முடியாதபடி நோயாளிகள் நிறைந்து விட்டதால் பிற்பகலிலிருந்து வரும் எல்லா நோயாளிகளும் ஜெனரல் மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டனர். இங்கு மட்டும், விஷ மது குடித்தவர்களுக்காக மூன்று விசேஷ வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.

போதையை அதிகரிப்பதற்காக மிதிலேடட் ஸ்பிரிட் அதிகம் கலந்ததன் விளைவாக இவ்வளவு மரணம் நேர்ந்தது என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ...

நடுவானில் விமானம் வெடித்து 17 பேர் சாவு

ரங்கூன், ஜூலை. 4 - பர்மா விமான படையின் டகோடா விமானமொன்று நேற்று நடுவானில் வெடித்ததன் விளைவாக விமானத்திலிருந்த 17 பேரும் உயிரிழந்தனர் என்று இன்று இங்கு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரங்கூனுக்கு 1200 கி.மீ. தொலைவிலுள்ள கெங்டுங்கிலிருந்து ரங்கூனுக்கு வந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென வெடித்ததாக அறிவிப்பு கூறியது.

இறந்தவர்களில் இருவர் விமானிகள் மற்றும் 5 பேர் விமான படை வீரர்கள். 7 பேர் சிப்பாய்கள். விபத்திற்கான ஏற்பட்டதன் காரணம் தெரியவில்லை.

Summary

5.7.1976: 60 people die in Chennai after consuming varnish.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.