சென்னை, ஜூலை 1- நகர்ப்புற நிலவரி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாலும், நகர்ப்புற நிலங்களின் மதிப்பு அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் நடப்பு நிதி ஆண்டில் நகர்ப்புற நிலவரி வசூல் இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டில் தமிழ்நாட்டில் நகர்ப்புற நில வரி மூலம் ரூ. 2.32 கோடி வசூலாயிற்று. இவ்வாண்டு ரூ. 5 கோடி ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையிலும், மற்றும், இதர இடங்களிலும் வரி விதிப்புக்காக நிலத்தை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இப்பணி முடிக்கப்படும். புறநகர்ப் பகுதிகளில் நிலங்களின் பரப்பு பெரிதாக உள்ளது. ஆனால் மதிப்பீடு செய்ய வேண்டிய அளவு குறைவாகவே இருக்கிறது.
வரியைக் குறைக்குமாறும், வரியைத் தவணைகளில் செலுத்த அனுமதிக்குமாறும் நில டிரிப்யூனலுக்குக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் நகர்ப்புற நிலவரி வசூல் பணி தடைப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நிலங்களின் விலைகள் உயர்ந்திருப்பதால் நிலங்களை மதிப்பீடு செய்யும் பணியில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. நிலங்கள் அமைந்துள்ள பகுதி, நிலம் பயன்படுத்தப்படும் விதம் முதலியவற்றை யொட்டி மதிப்பீடு செய்ய வேண்டி உள்ளது. நில விற்பனைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களும் புதிதாக திரட்டப்படுகின்றன. ...
பி. ஏ. சி. நிறுவனம் விற்கும் ஜெட் பயணிகள் விமானம்: இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கும்?
சென்னை, ஜூலை. 1- பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (பி.) ஏ.சி.) என்ற விமான விற்பனை நிறுவனம், ஓமான் நாட்டு சுல்தானின் விமானப் படையைச் சேர்ந்த பெரிய ஜெட் விமானங்களை விற்பனை செய்கிறது.
இந்த ஜெட் விமானத்தில் 74 பேர் அமர்ந்து பிரயாணம் செய்யலாம். இந்த விமானத்தை வாங்கலாமா என்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது. அதற்காக இந்த விமானம் பரீட்சார்த்த முறையில், இந்தியாவில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பறக்கவிடப்படுகிறது. பி. ஏ. சி. நிறுவனத்தின் 111-வது வரிசையைச் சேர்ந்த இந்த விமானம் இன்று காலை டில்லியிலிருந்து கிளம்பியது. பவநகர் வழியாக பம்பாயை அடைந்தது. பவநகர் விமான நிலையம் சிறியது. அங்கு விமானம் ஓடும் பாதை (ரன் வே) சிறியது. போயிங் 737 விமானத்தைப் போன்ற பெரிய ஜெட் விமானம் செயல்படுவதற்கு வசதிகள் அங்கு போதுமானவை அல்ல. அங்கு பி.ஏ.சி.யின் இந்த விமானம் இறங்கியது. பம்பாய் சென்றது. பின்னர் அங்கிருந்து மங்களூர், கொச்சி விமான நிலையங்களில் இறங்கி, மாலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இன்றிரவு அந்த விமானம் மீனம்பாக்கத்தில் தங்கும். நாளை கார் நிக்கோபார், போர்ட் பிளார், கல்கத்தா ஆகிய இடங்களுக்கு பரீட்சார்த்த முறையில் பறக்கும். சோதனை முறையிலான அதன் பயணம் 4-ந் தேதி வரையில் நடக்கும். காட்மண்டு, ஜம்மு, ஸ்ரீநகர், லே பகுதிகளுக்கும் அது செல்லும்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காப்டன் வில்லியம்ஸ் அந்த விமானத்தின் விமானியாகச் செல்கிறார். பி. ஏ.சி. மார்க்கெட்டிங் டைரக்டர் ஏர் வைஸ் மார்ஷல் ஐயான் லாசன், மூன்று அனுபவம் மிகுந்த விமானிகள், இந்தியன் ஏர்லைன்ஸின் பல அதிகாரிகள் ஆகியோர் அதில் பிரயாணம் செய்கிறார்கள். ...
Summary
2.7.1976: Valuation of urban lands in Tamil Nadu for tax collection.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

29.6.1976: த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

பால் கொள்முதலில் பற்றாக்குறை... தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் குறைப்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை பதவியேற்பு!







