உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

19.7.1976: ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் - பிரிட்டிஷ் அரசி எலிஸபெத் துவக்கினார்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

News image

19.7.1976 - Dinamani

Updated On :19 ஜூலை 2026, 4:00 am IST

மாண்ட்ரீல், ஜூலை. 18 - கனடாவில் மாண்ட்ரீல் நகரில் 21-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை, பிரிட்டிஷ் அரசி எலிஜபெத் சனியன்று மாலை துவக்கி வைத்தார்.

தைவானும், 4 அரபு தேசங்களும், 17 ஆப்ரிக்க நாடுகளும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை இந்த நாடுகளின் 600 விளையாட்டு வீரர்கள் விலகியதால், ஆட்டங்களின் அட்டவணையை மாற்ற வேண்டியதாயிற்று.

பிரிட்டிஷ் ராணி எலிஜபெத் நேற்று மாலை 3 மணிக்கு (இந்திய - நேரம் இரவு 12-30) ஆரம்பித்து வைத்துப் பேசினார். உண்மையான விளையாட்டுப் பெருந்தன்மை உணர்வுடன், விளையாட்டின் மேம்பாட்டுக்காக அவரவர் திறமையை இளம் வீரர்களும், வீராங்கனைகளும் காட்டுமாறு விழாவைத் துவக்கி வைத்தார்.

நவீன ஒலிம்பிக் விழாவின் 80-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 80 பெண்கள் ஐந்து வட்டாரங்களாக வகுத்து ஆடியும் பாடியும் விழாவுக்கு சிறப்புக் கூட்டினர்.

மரியாதை குண்டுகள் முழங்க கொடி ஏற்றுவிக்கப்பட்டது. 5 கூடைகளிலிருந்து 80 புறாக்கள் ஏவப்பட்டன. உலக வீரர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் கனடா உடல் திறன் வீரர்கள் பல்வேறு உடல் பயிற்சி வித்தைகள் செய்து காட்டினர். உடல் உரமும், தோள் திறனும், பாலே நடனத்தின் மென்மையை எய்தும் வகையில் வித்தைகள் அமைந்திருந்தன. ...

... வண்ணமீந்த ஆசியா

38 இந்தியர்கள் நீல நிற பிளேஸர் சட்டைகளும், குங்குமப்பூ (ஆரஞ்சு) நிறத் தலைப் பாகைகளும் அணிந்து ஹாக்கி காப்டன் அஜித்பால் சிங் தலைமையில் அணி வகுத்து வந்தனர். 243 ஜப்பானியர் செந்நிற சட்டைகளும், வெள்ளைத் தொப்பிகளும், வெள்ளை சராய்களும் அணிந்து வந்தனர். 46 மலாசியர்கள் நீல நிற சட்டை, நிஜார்களும், கறுப்பு சம்போக் தொப்பிகளும் அணிந்திருந்தனர். 48 பாகிஸ்தானிகள் இலைப் பச்சை சட்டைகளும், இளம் மஞ்சள் சராய்களும் அணிந்திருந்தனர். 5 சிங்கப்பூரியர்கள் மஞ்சள் சட்டைகள், பழுப்பு ஜாக்கெட்டுகள் சிகப்பு டைகள் உடுத்திருந்தனர். 26 ஹாங்காங்கியர் நீல சட்டைகள், வெள்ளை நிஜார்களுடன் இருந்தனர். ...

ஹாக்கி: ஆரம்ப ஆட்டத்திலேயே இந்தியா வெற்றி - அர்ஜென்டீனாவை 4 கோலில் வீழ்த்தியது

மாண்ட்ரீல், ஜூலை. 18 - ஆரம்பமே அற்புதமான பிள்ளையார் சுழியாக அமைந்துவிட்டது; மாண்ட்ரீல் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய அணியின் முதலாவது ஆட்டமே அதற்கு வெற்றி தேடித் தந்துள்ளது. அது இன்று அர்ஜென்டீனா அணியை 4 கோல்கள் போட்டுத் தோற்கடித்தது.

மான்ட்ரீல் நகரில் மோல்கன் ஸ்டேடியத்தில் இந்தப் பந்தயம் நடந்தது.

ஹாக்கியில் உலகக் கோப்பையை வென்றவர்களும், ஏழு தடவை ஒலிம்பிக் சாம்பியனானவர்களுமான இந்திய அணிக்கு இது ஒரு அற்புத ஆரம்பமாகும்.

1975 உலகக் கோப்பை போட் டியில், அர்ஜெண்டீனாவிடம் இந்தியா ஒரு முறை தோற்றது: இதற்கு இந்தியா இன்று பழி தீர்த்துக் கொண்டது; கடந்த ஆறு ஆண்டுகளில், அர்ஜெண்டினா மீது இந்தியா இவ்வளவு பெரும் வெற்றி அடைந்ததில்லை. ...

Summary

19.7.1976: Olympic Games begin – Queen Elizabeth of Britain inaugurated them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.