30.11.1976: தொழில்களில் 'லே ஆப்' கூடாது: நிர்வாகிகளிடம் அரசு வற்புறுத்தல்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

30.11.1976 - Dinamani
சென்னை, நவ. 29 - அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு மறுக்கும் முயற்சியோ லே ஆப் செய்யும் வேலையை அல்லது முயற்சியோ அல்லது சகஜமான வேலை மீண்டும் ஆரம்பமாவதைத் தாமதப்படுத்தும் முயற்சியோ அல்லது அவசரமான ரிப்பேர் வேலைகளைத் தாமதப்படுத்தும் முயற்சியோ கடுமையான விஷயமாகக் கருதப்படும் என்று தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் த. நா. அரசு கூறியுள்ளனர்.
அரசு செய்தித்துறை வெளியீட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு கூறுவதாவது:-
"அண்மையில் வெள்ளம் காரணமாக பல தொழில் நிறுவனங்களில் வேலை பாதிக்கப்பட்டு, இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்படாமல் போயிருக்கிறது. இந்த நிறுவனங்களில் உடனடியாக சகஜ வேலை திரும்பச் செய்ய எல்லா முயற்சியும் செய்யப்படவேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வற்புறுத்த அரசு விரும்புகிறது. தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கவோ, அவர்களை லே ஆப் செய்யவோ, சகஜ வேலை மீண்டும் துவங்குவதைத் தாமதப்படுத்தவோ அல்லது முக்கியமான ரிப்பேர் வேலைகளைத் தாமதப்படுத்தவோ செய்யும் எந்த முயற்சியையும் அரசு கடுமையாகக் கருதும் என்று நிர்வாகிகளுக்குக் கூறவும் விரும்புகின்றனர். வெள்னத்தின் பாதகமான விளைவுகளினால் ஏற்கனவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுடைய பிரச்னைகளை மேலும் அதிகரிக்கக் கூடிய எதையும் செய்யாமலிருப்பது முக்கியமாகும். கூடுமானவரை உற்பத்தியும் வேலை வாய்ப்பும் அதிகமான அளவில் இருக்கச் செய்ய எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும். ...
பினாமி ஒழிப்புச்சட்டம்: பார்லிமெண்டின் அடுத்த கூட்டத்தொடரில் வரலாம்
புதுடில்லி, நவ. 29 - பினாமி சொத்துக்களும், பினாமி பேரங்களும் பரவலாக இருப்பதை ஒடுக்குவதற்காக மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒரு மசோதாவைத் தயாரித்து வருகிறது. இச்சட்டம் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பினாமி ஏற்பாடானது பல்வேறு வடிவங்களில் உள்ளது. எனினும், பொதுவில் சொல்வதானால் பினாமி ஏற்பாடானது பெரிதும் வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக ஒருவர் போலி பெயர்களில் சொத்தை பெற்றிருப்பது அல்லது வாங்குவதேயாகும்.
இவ்வித பினாமி ஏற்பாட்டை அடியோடு ஒழிக்க, இப்போது தயாரிக்கப்படும் சட்டமானது. பினாமி பேரத்தில் ஈடுபடுவதைத் தண்டிக்கத்தக்க ஒரு குற்றமாக்கும் என்று தெரிகிறது.
நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, பினாமி பேரத்தில் ஒருவர் ஈடுபட்டால், இப்பேரத்தில் சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்புக்கு குறையாமல் அபராதம் விதிக்க இப்போது தயாராகும் மசோதாவில் வகை செய்ய பூர்வாங்கமாக உத்தேசிக்கப்பட்டுள்ளது . நெறி கெட்டவர்கள் ஒன்றரை மடங்குக் அபராதத்துக்கும் துணிந்து இவ்வித பேரத்தில் ஈடுபடாமல் இருக்கும் பொருட்டு, 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யவும் பூர்வாங்கமாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பினாமி ஒழிப்பு மசோதாவானது, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அநேகமாக பார்லிமெண்டின் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படலாம். ...
Summary
30.11.1976: No 'lay-offs' in industries: Government urges management
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


