பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

18.9.1976: மொஸாம்பிக்கில் நிலக்கரிச் சுரங்க விபத்து: 140 பேர் சாவு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

18.9.1976 - Dinamani

Published On :

மபுடோ (மொஸாம்பிக்) செப். 17- வடகிழக்கு மொஸாம்பிக்கில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் காலரி இடிந்து விழுந்த போது 140 சுரங்கத் தொழிலாளர்கள் மாண்டனர் என்று மொஸாம்பிக் ரேடியோ இன்று அறிவித்தது.

பெரும்பாலான சுரங்க தொழிலாளர்கள் சுரங்கத்துக்கு உள்ளே இருந்த போது விபத்து ஏற்பட்டது.

மொஸாம்பிக் தொழில் துறைக்கு அந்தச் சுரங்கம்தான் பிரதானமாக நிலக்கரி சப்ளை செய்கிறது.

சுரங்கத்துக்கு வெளியே வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் மாண்டதாக ரேடியோ கூறியது.

கடற்கரையில் காமராஜ் சிலை: இடத்தை கவர்னர் பார்வையிட்டார்

சென்னை, செப். 17 - சென்னை சாந்தோம் பகுதியில் போலீஸ் கம்பியில்லாத் தந்தி நிலையம், (போலீஸ் ரேடியோ ஆபீஸ் எதிரில்) அமரர் காமராஜ் உருவச்சிலை அமைக்கப்பட விருக்கிறது. இந்த இடத்தை வெள்ளியன்று காலை தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில் கவர்னர் சுகாதியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாருடன் சென்று பார்த்தார்.

கவர்னரையும் முப்பனாரையும் நெடுமாறனும், கவிஞர் கண்ணதாசனும் வரவேற்றார்கள். சிலை அமைக்கும் இடத்தையும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கவர்னர் கேட்டுத்தெரிந்து கொண்டார்.

முதலில் இந்தச் சிலை அகில இந்திய ரேடியோவுக்கு எதிரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கலங்கரை விளக்கத்தை அடுத்து அமைப்பதாக ஏற்பாடு ஆகியிருந்தது. இப்பொழுது போலீஸ் ரேடியோ அலுவலகத்திற்கு எதிரே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்புக்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Summary

18.9.1976: Coal mine accident in Mozambique: 140 dead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.