
27.9.1976: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி பதில் பிரமாண வாக்குமூலம் தாக்கல்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

27.9.1976 - Dinamani
சென்னை, செப். 26 - முன்னாள் த.நா. முதலமைச்சர் கருணாநிதி சர்க்காரியா கமிஷன் முன்பு தமக்காகவும், இதரர்களுக்காகவும் பதில் பிரமாண வாக்குமூலமொன்றை தாக்கல் செய்திருக்கிறார்
கமிஷன் சார்ந்திருக்கும் வாக்கு மூலங்கள் அல்லது பிரமாண வாக்குமூலங்களை அளித்துள்ள ஒவ்வொரு நபரையும் பிரதிவாதிகள் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய வேண்டுகோளை கருணாநிதி ஊர்ஜிதம் செய்திருக்கிறார். புலன் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள், இதர தஸ்தாவேஜிகள் ஆகியவற்றை ஆதாரப்பூர்வமான சாட்சியமாக கருதக் கூடாது என்றும், மகஜர்களைச் சமர்ப்பித்த எம்.ஜி. ராமச்சந்திரன். எம். கல்யாண சுந்தரம், கே. மனோகரன், ஜி. விசுவநர்தன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கருணாநிதியின் பதில் பிரமாண வாக்குமூலம் கேட்டுக் கொண்டார்.
முந்தைய வேண்டுகோளை ஏற்காமல் சர்க்காரியா கமிஷன் தற்போது நடத்தி வரும் விசாரணையை யொட்டி பதில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதிகள் முன்பு தாக்கல் செய்த மனுவின் மீது நீதிபதி சர்க்காரியா பிறப்பித்த செப். 20 தேதியிட்ட உத்திரவில் "விமான மூலம் மருந்து குற்றச்சாட்டு சம்பந்தமாக தெளித்தல்" ஏற்கெனவே அழைக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணை திட்டமிட்டபடி துவங்கும் என்றும், செப். 29 வரை தினசரி விசாரணை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புலன் விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள் அனைவரின் (கமிஷன் முன்பு ஏற்கனவே தங்களது பிரமாண வாக்குமூலங்களைத் தாக்கல் செய்யாதவர்கள்) சாட்சியத்தை சாத்யமான அளவு பிரமாண வாக்குமூலங்களின் பேரில் எடுத்துக் கொள்வதாக நீதிபதி சர்க்காரியா தமது உத்திரவில் கூறினார். சாட்சிகளில் ஒருவரான எஸ்.ஏ. ராமச்சந் திரன் வாய்மொழி விசாரணைக்காக ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 18 பேர் தங்களுக்குத் தெரிந்த விவரங்கள் சம்பந்தமாக பிரமாண வாக்குமூலங்களின் பேரில் தங்களது வாக்குமூலங்களை செப். 29ல் அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாக உத்திரவு குறிப்பிட்டது. ...
தேர்தல் எப்போது? பிரதமர் பதில்
லண்டன், செப். 26 - பொதுத் தேர்தலை தவிர்க்க விரும்பவில்லை என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி பிரிட்டிஷ் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"எனது மக்களுக்கு அறிவிப்பதற்கு முன் உங்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்கப் போவதில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்க முடியும். ஆனால், பொதுத் தேர்தலைத் தவிர்க்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவுதான் நான் சொல்ல முடியும்" என்றார்.
எப்போது அவசர நிலைக்கு முடிவு கட்டி, பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
உத்தேச அரசியல் சட்டத் கேள்வி திருத்தங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பிரஜா உரிமைகள் அமல் நீதிமன்றப் பரிசீலனையில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறுவதை மறுத்தார். "பார்லிமெண்டுக்கு உரித்தான உரிமைகளை வழங்க முயல்கிறோம். நாங்கள் செய்வதெல்லாம் இவ்வளவுதான். இந்த உரிமைகள் பதிலளிக்கையில், அரசியல் அமுக்கப்படுகின்றன. சாஸனத்தின் கருத்துக்கு மாறுபட்ட வகையில் அரசியல் அமைப்புக்குப் பொருள் கூறப்படுகிறது. இதனால் எவ்விதமான சீர்திருத்தங்களும் தடைப்படுகின்றன” என்று கூறினார்.
பிரிட்டனில் டெலிவிஷன் மிகவும் மும்முரமாகப் பார்க்கப்படும் நேரத்தில் சுயேச்சை டெலிவிஷன் செய்தியில் ஒரு பகுதியாக, இரவு 10 மணிக்கு பிரதம மந்திரி பேட்டி ஒளிபரப்பப்பட்டது. ...
Summary
Karunanidhi files a counter-affidavit before the Sarkaria Commission.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





