வயிற்றுப் போக்கிற்கு நிவாரணமாக உதவும் கசாயம்

முதலில் வேப்பிலையை  எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 300 மி.லி தண்ணீர் ஊற்றி அதில்
வயிற்றுப் போக்கிற்கு நிவாரணமாக உதவும் கசாயம்
Updated on
1 min read

தேவையான பொருட்கள்

வேப்பிலை           -   ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள்        -    இரண்டு சிட்டிகை

தேன்                      -     சிறிதளவு
                                     
செய்முறை

முதலில் வேப்பிலையை  எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 300 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 100 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி  வடிகட்டிக் கொள்ளவும். பின்பு வடிகட்டிய கசாயத்துடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக  குடித்து வரவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் வயிற்றுப் போக்கிற்கு உதவும் அருமருந்தாகும். வயிற்றுப் போக்கினால் துன்பப்படும் பொழுது இந்த கசாயத்தை தயார் செய்து  கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு உடனே நிற்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா, 

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell :  96557 58609 ,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com