வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து

வாயுச் சார்ந்த குறைபாடுகளில் இருந்து குணமாக நல்வேளைக் கீரை வாய்விளங்கச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன்பெறுங்கள். 
gastric problem
gastric problem
Updated on
1 min read

வாயுச் சார்ந்த குறைபாடுகளில் இருந்து குணமாக நல்வேளைக் கீரை வாய்விளங்கச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

நல் வேளைக் கீரை (உலர்ந்தது)  -  250  கிராம்

வாய் விளங்கம்        -    50  கிராம்

ஓமம்                           -    50  கிராம்

மிளகு                        -     50 கிராம்

செய்முறை

முதலில் நல்வேளைக் கீரையை  ஆய்ந்து எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். வாய் விளங்கம், ஓமம், மிளகு ஆகியவற்றைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். நன்கு உலர்ந்த கீரையுடன் மேற் கூறிய அளவு வாய் விளங்கம், ஓமம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கி  அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்
இந்த சூரணம் வாயுக் கோளாறுகள் அனைத்தையும் போக்க  உதவும் அருமருந்தாகும். 

மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும்  காலை மற்றும் மாலை என இருவேளையும்  உணவிற்குப் பின்பு 2 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

மேற்கூறிய சூரணம்  துணை உணவாகப் பயன்படக்கூடியது.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell :  96557 58609   ,  75503 24609

Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com