குழந்தைகளை தத்தெடுப்பது குறைந்துவிட்டதா?
குழந்தைகளை தத்து எடுக்கும் எண்ணிக்கை சமீபத்தில் வெகுவாக குறைந்துள்ளது


குழந்தைகளை தத்து எடுக்கும் எண்ணிக்கை சமீபத்தில் வெகுவாக குறைந்துள்ளது என்கிறது ஒரு ஆய்வு. இதை சரி செய்ய தத்து எடுப்பவர்களுக்கான சில வெளிப்படையான எளிமையான திட்டங்களை பரிசீலித்து வருகிறது அரசு.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனாதைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் ஆகியோரை நெறிப்படுத்தி வருபவர்கள் சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அதாரிட்டி (CARA) எனும் அமைப்பாகும். குழந்தைகளை தத்து கேட்டு வரும் எண்னிக்கை சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது என கவலையுடன் அறிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பு எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி சுமார் 5964 குழந்தைகள் 2011-12 தத்து எடுக்கப்பட்ட பட்டியலில் இருந்தனர். இது 2016-17-ல் 2406 என குறைந்துள்ளது. ஐந்து வருடங்களில் சுமார் 60 சதவிகிதம் குறைந்துவிட்டது என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும். அடுத்தடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் ஆபாயம் இருக்கிறது.
உள்நாட்டினரிடம் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரிடமும் ததெடுக்கும் வழக்கம் சமீபத்தில் கணிசமாகவே குறைந்துள்ளது. CARA வின் கணிக்கெடுப்பின் படி வெளிநாட்டினர் தத்து எடுப்பது 2012-13-ல் 430 என்பதாக இருந்தது இதே 2016-17-ல் 356 ஆக குறைந்துவிட்டது. இடைப்பட்ட வருடமான 2015-16-ல் இது 666 என அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு CARA விடம் இதற்கான காரணங்களை கவனமாக ஆராய்ந்து தத்து எடுக்கும் விகிதத்தை உயர்த்த தகுந்த முயற்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஐந்தே வருடங்களில் குழந்தைகளை தத்து எடுக்கும் சதவிகிதம் கணிசமாக குறைந்துவிட்டதை இந்த எண்ணிக்கை உறுதிபடுத்துகிறது என்றனர் இந்தக் குழுவினர்.
CARA இதற்காக தத்து எடுக்கும் விதிமுறைகள் 2017 என்ற தலைப்பில் தத்தெடுக்கும் நடைமுறைகளை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இணையதளச் சேவையை பயன்படுத்தி தத்து எடுக்கும் முறையில் எளிமைப்படுத்தப்படும். தவிர எந்த நடைமுறைச் சிக்கலும் இல்லாமல் ஒளிவு மறைவில்லாத தன்மையுடன், தம்பதியரின் விருப்பத் தேர்வுக்கு ஏற்றவகையில் தத்து எடுக்கும் வழிமுறைகள் குழப்பங்கள் இன்றி இனி எளிமையானதாக இருக்கும்.
2015-ஆம் ஆண்டு அரசு தத்து எடுப்பது குறித்து புதிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதனால் குழந்தைகளை தத்து எடுக்கும் நிலை கணிசமாக குறைந்துவிட்டது. எனவே அத்தகைய கடினமான சட்டதிட்டங்களை ஒழுங்குபடுத்தி எளிமையான அதே சமயம் முறையான நெறிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. ஒரு குழந்தையை தத்தெடுக்க தம்பதியர் காத்திருக்கும் காலமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றங்கள் நிகழும், தத்து எடுக்கும் சதவிகிதம் உயரும் என்று இந்த அமைப்பு நம்புகிறது.
எந்த அளவுக்கு சட்டம் எளிமையாகவும், குழந்தை மற்றும் வருங்கால பெற்றோர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும், தம்பதியர் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற வகையில் உள்ளதோ அந்தளவுக்கு இதுபோன்ற திட்டங்களில் வெற்றி அமையும் என்பது உண்மைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...