செயற்கை கருத்தரிப்பு: நவ.8 -இல் இலவச மருத்துவ முகாம்

சென்னை போரூர் ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவ மையத்தில் வரும் 8 -ஆம் தேதி (புதன்கிழமை) குழந்தையில்லா தம்பதியருக்கான செயற்கை கருத்தரிப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

சென்னை போரூர் ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவ மையத்தில் வரும் 8 -ஆம் தேதி (புதன்கிழமை) குழந்தையில்லா தம்பதியருக்கான செயற்கை கருத்தரிப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம் அன்றைய தினம் (நவ.8) காலை 8 முதல் மதியம் 1 மணி வரை இராமசாமி உடையார் ப்ளாக் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது. 
பதிவு செய்வோருக்கு சில பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படும். சில பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் செய்யப்படவுள்ளன. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியர் இம்முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்போர் ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் பெற்றிருந்தால் அவற்றுக்கான பதிவேடுகளைக் கொண்டு வருவதும் அவசியம் என்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com