முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்!

நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது.
முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்!
Published on
Updated on
2 min read

நமது உடல் ஒரு இயந்திரம் போன்றது அதற்கு நாம் உண்ணும் உணவுகளே எரிபொருட்களாகி இந்த இயந்திரத்தை இயக்குகிறது. அப்படி இருக்கையில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. அந்த வகையில் பல மருத்துவ குணங்களை கொண்ட தேன் மற்றும் பாலினால் நமக்குக் கிடைக்கும் உடல்நல நன்மைகளைப் பற்றி அறிவீர்களா?

தினமும் வெது வெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிப்பதினால் எந்தெந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்று பார்ப்போம்.

1. ஆற்றலை அதிகரிக்கும்:

ஒரு பெரிய கிளாஸ் பாலில் இருக்கும் கால்சியம் சத்துடன், நமது உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருக்கும் தேனை கலந்து குடிப்பதால் அது உடல் வலிமையை அதிகரிக்கும்.

2. எலும்புகளை வலிமையாக்கும்:

எலும்புகளின் வலிமைக்குத் தேவையானது கால்சியம் என நாம் அனைவருக்கும் தெரியும், அந்தச் சத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் போல். ஆனால் நமது உடல் இந்த கால்சியம் சத்தை சரியாக உறிந்து எடுப்பதில்லை, அதனால் பாலில் தேனைக் கலப்பதன் மூலம் இந்த கால்சியம் சத்து ரத்தத்தின் வழியாக எலும்புகளைச் சென்றடைகிறது. கால்சியம் எலும்புகள் மட்டும் இல்லாமல் பல் வலிமை மற்றும் முடி வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று.

3. செரிமானத்தை அதிகரிக்கும்:

தேனில் இருக்கும் புரோபயாடிகள், பாலில் இருக்கும் புரோபயாடிக் கலவைகளையும் மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. 

4. மலச்சிக்கலைச் சரி செய்யும்:

இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் தேனைக் கலந்து குடிப்பது மறுநாள் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்திவிடும்.

5. தோல் சுருங்காமல் தடுக்கும்:

பால் மற்றும் தேன் கலவையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் வயதாவதால் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் வயதின் காரணமாகவோ அல்லது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து சருமத்திற்கு ஊட்டச்சத்தைத் தந்து முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

6. தூக்கமின்மையைச் சரி செய்யும்:

தேன் ஒரு இனிப்பான உணவு என்றாலும் அது உடலின் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தி இரவில் தூக்கமின்மை பிரச்னையை சரி செய்யும்.

பால் மற்றும் தேன் கலவையைக் குடிப்பதன் மூலம் இதைப் போன்ற பல அடிப்படை பிரச்னைகளில் இருந்து நாம் விடுபட முடியும். அனைத்துச் சிக்கலுக்கும் மருத்துவரைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து உணவையே மருந்தாக்கித் தீர்வு காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com