காய் : புடலங்காய் பச்சடி
சத்துக்கள் : புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புடலங்காய் தோல் விதையுடன் (200 கிராம்) , சாம்பார் வெங்காயம் (3), மிளகுத் தூள் (தேவைக்கேற்ப) , கொத்தமல்லித் தழை (1கைப்பிடி) , எலுமிச்சம் பழச் சாறு தோலோடு (1பழம்), தயிர் (100 மி.லி).
செய்முறை
முதலில் புடலங்காயை சுத்தம் செய்து (தோல், சதை, விதையோடு) சிறிது சிறிதாக அரிந்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சாம்பார் வெங்காயம், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி ஒன்றாக கலக்கிக்கொள்ளவும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தயிர் இரண்டையும் ஊற்றி அதனுடன் தேவைக்கேற்ப மிளகுத் தூள் , சீரகம் , உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொண்டு தினமும் காலை வேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் உண்டாகும் குறைபாடு உடனே நீங்கும்.
(பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுக்கலாம்)
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா? அபிஜீத் தீப்கே

விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



