கீரை : வல்லாரை சர்பத்
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை - அரை கிலோ
ரோஜாப் பூ - கால் கிலோ
செம்பருத்திப் பூ - கால் கிலோ
ஏலக்காய் - 10 கிராம்
கற்கண்டு - அரை கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்
செய்முறை : வல்லாரைக் கீரை, ரோஜாப்பூ, செம்பருத்திப் பூ, ஏலக்காய் இவை நான்கையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சாற்றுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவு சுண்ட வைக்கவும். பின்பு இதனுடன் கற்கண்டை தூளக்கி சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!

இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

தில்லியால் தள்ளாடும் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ராகுலின் ஒப்புதலுக்கு காத்திருப்பு!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



