தீராத மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும் அருமருந்து

தீராத மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும் அருமருந்து

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.
Published on

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்னை தீராது. இதனால் மூட்டு வலி, இடுப்பு வலி, தலை வலி எனப் பல உபாதைகள் உருவாகும்.  இப்பிரச்னைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. 

  • தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச்சிக்கல் தீரும். மேலும் கறிவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
  • பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டுக் காய்ச்சவும். இரவு படுக்கப் போகும் போது இதைக் குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
  • பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்..
  • அகத்திக் கீரையை வாரம் 1 நாள் சமைத்து உண்ண மலச்சிக்கல் தீரும்...
  • காலை எழுந்தவுடன் 1.260 மி சுத்தமான குடிநீர் அருந்தி வர மலச்சிக்கல், வயிற்று உபாதைகள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்...
  • எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பிழிந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
  • வல்லாரையை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
  • இளநீரில் சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
  • துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி, அகத்திக் கீரை ஆகியவைகளின் இலைகளை பறித்து நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரு வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com