ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இன்றைய மருத்துவ சிந்தனை 23.11.2016சிறு கீரை

சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக்குடித்து

News image
Updated On :23 நவம்பர் 2016, 7:34 am

சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக்கு  குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுகீரையுடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றைத்  தேவையான அளவுசேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.

சிறுகீரை, பார்லி ஆகியவற்றோடு சீரகம் (சிறிதளவு) மற்றும் மஞ்சள்தூள் (4 சிட்டிகை ) சேர்த்துக்கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம் , உடல் பருமன் குறையும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்து கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல்நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையோடு மிளகுத் தூள், உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யொடு  சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.