முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

இன்றைய மருத்துவ சிந்தனை நச்சுக் கொட்டைக் கீரை

நச்சுக்கொட்டைக் கீரை

News image
Updated On :14 பிப்ரவரி 2017, 10:00 am IST

நச்சுக்கொட்டைக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி , கழுத்து வலி குணமாகும்.

நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாபாபிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் , வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள் அனைத்தும் தீரும்.

நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடற்புண்கள் ஆறும்.

நச்சுக்கொட்டைக் கீரைச் சாற்றில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் வெளியேறும்.

பாசிப்பருப்பை  வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து  மதிய உணவுடன் சாப்பிட்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.