மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்), பசும்பால் (2லிட்டர்), மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிக்கொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணிப் பூக்களைப் பறித்து ,தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
மருதாணிச் செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்..
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










