இன்றைய மருத்துவ சிந்தனை அதிமதுரம்
அதிமதுரம், சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இரண்டு கிராம்


அதிமதுரம், சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் தலைவலி முழுமையாக குணமாகும்.
அதிமதுரம், கீழாநெல்லி, சீரகம் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும்.இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் கல்லீரல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
அதிமதுரம், ஆடாதொடை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை முடி உதிர்தல் இருக்காது.
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...