குப்பைமேனிக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கி ,ஓரு ஸ்பூன் அளவுக்கு பசும்பாலில் கலந்து சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் நெஞ்சுவலி சரியாகும்.
குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தடவினால் தொண்டைக்கட்டு சரியாகும்.
குப்பைமேனிக் கீரை, மஞ்சள், வேப்பிலை இவை மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக் குளித்து வந்தால் தேவையில்லாத முடிகள் உதிர்ந்துவிடும்.
குப்பைமேனிக் கீரை, நிலவேம்பு இவை இரண்டையும் சம அளவு அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் தீரும்.
குப்பைமேனிக் கீரையை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்குக் கொடுத்தால் வாந்தி ஏற்படும் . அதில் நெஞ்சுசளி எல்லாம் வெளியேறிவிடும்.
குப்பைமேனிக் கீரைச் சாற்றுடன் (100 மில்லி) விளக்கெண்ணெய் (ஒரு லிட்டர்) சேர்த்துக் காய்ச்சி, தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூலக் கிருமிகள் அழிந்துவிடும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 23 - நேரலை!

மாற்றமும் தடுமாற்றமும்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

பரிமளா அண்ட் கோ முதல் பாடல்!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



