ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க இதோ ஓர் ஐடியா!
பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும்போது துண்டுகளாக்கிப் போட்டாலும் பல சமயங்களில்


பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும்போது துண்டுகளாக்கிப் போட்டாலும் பல சமயங்களில் நைஸாக அரைபடாமல் அப்படியே நறுக்நறுக்கென்றிருக்கும். மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தால் நன்கு மசிந்துவிடும். மிளகாய் ரொம்ப நீளமாக இருந்தால் கூடுதலாக குறுக்காகவும் வெட்டிப் போடுங்கள்.
பாகற்காய் சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்போம். அதற்கு பதில் பாகற்காயை பொரியலாகச் செய்யும் போது கேரட் அல்லது பீட்ரூட் துருவி தாளிப்புடன் சேர்த்து வதக்கிவிட்டு பின்னர் பாகற்காய் சேர்க்கவும். பாகற்காய் குழம்பு அல்லது பாகற்காய் பிட்லை செய்யும் போது சில துண்டுகள் கேரட்டையும் சேர்த்து வேகவிட்டால் ருசியும் சத்தும் கூடுவதோடு பாகற்காயின் கசப்புத் தன்மையும் குறைந்துவிடும்.
அதிக கனமுள்ள தோசைக்கல்லை தோசை சுடவும், கனமில்லாத கல்லை சாப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.
சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைத் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
குக்கரில் பொருள்களை வேக வைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் பொருள்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.
1.jpg)
ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க இதோ ஓர் ஐடியா! ஒரு கிண்ணம் கெட்டித் தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரை தேக்கரண்டி சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால் ப்ரைடு ரைசுக்கு ஏற்ற அவசர ரய்த்தா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...