மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இன்றைய மருத்துவ சிந்தனை: பிரண்டைக் கீரை

பித்த மயக்கம்

News image
Updated On :1 மார்ச் 2018, 8:37 am

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பிரண்டைக் கீரை:

  • குடற் புண் , தொண்டைப் புண் , ஆசணப் புண் குணமாக உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
  • மூட்டு வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி நீங்க பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
  • மாதவிலக்குப் பிரச்சனை தீர பிரண்டையை  இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.
  • இளைத்த உடல்  பெருக்க பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
  • இதயம் சார்ந்த பிரச்சனை தீர பிரண்டைத் தண்டுடன் , வாதநாராயணன் இலை ,பூண்டு ,மிளகு ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
  • பித்த மயக்கம் , உடல் எரிச்சல் நீங்க பிரண்டை இலையுடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.