காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடுப்பு மற்றும் கை கால் வலிகளை நீக்கும் ஆரோக்கிய கஞ்சி

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி  அவற்றில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2019, 9:44 am

கோவை பாலா

 
முருங்கை இலைக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

காய வைத்துத் தூள் செய்யப்பட்ட முருங்கை இலைத் தூள் -   10  கிராம்
சோளமாவு -   50 கிராம்
வறுத்த சோயா பீன்ஸ் மாவு - 25 கிராம்
வறுத்த வேர்கடலைப்  பொடி -  10 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - 5 கிராம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும். பின்பு கரைத்த கரைசலை அடுப்பில் வைத்து நெருப்பை மிதமாக வைத்து கிளறிக் கொண்டியிருக்க வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். இறுதியில் நீர் சுண்டி மாவின் நிறம் மாறியதும் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை  இடுப்பு வலி, கை கால் வலி உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக அமையும். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம். ஊட்டச் சத்து நிறைந்துள்ளதால் தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு கண்கள் ஒளி பெறும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.