குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் சாப்பிட எளிதான ஸ்னாக்ஸ் என்றால் அது பிஸ்கெட் தான். ஆனால் பிஸ்கெட் சாப்பிடுவது உடல்நலத்துக்குக் கெடுதல் என்கிறார்கள். இது உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தால் பதில் அதிர்ச்சி தருவதாகக்தான் உள்ளது.
இப்ப நீங்களே சொல்லுங்க, பிஸ்கெட் நல்லதா கெட்டதா? அமிர்தமாக இருந்தாலும் கூட அளவுக்கு மிஞ்சினால் அது கெடுதல்தான். எனவே ஆசைக்காக ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட்டுகளை சாப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் வேர்க்கடலை மிட்டாய், சத்துமாவு லட்டு போன்ற வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்னாக்ஸை சாப்பிட வைத்து அவர்கள் ஆரோக்கியத்தை பலப்படுத்துங்கள்.