தங்கச் சம்பா வெந்தயக் கஞ்சி
தேவையான பொருட்கள்
தங்கச் சம்பா அரிசி - 100 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மிளகு - 5 கிராம்
திப்பிலி - 3
பெருங்காயம் - 5 சிட்டிகை
செய்முறை
- முதலில் தங்கச் சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவை அனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- ஊற வைத்துள்ள தங்கச்சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலக்கி கொதிக்க வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைத்து குடிக்கவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இருதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வாரம் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்ளவும்.
படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


