புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், பித்தப்பை கற்களைக் கரைக்கவும் உதவும் அருமருந்து

இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

News image
Updated On :3 மார்ச் 2021, 7:39 am

தினமணி

இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

மிளகு            - 100 கிராம்

கீழாநெல்லி    -    250 கிராம்

செய்முறை

முதலில் கீழாநெல்லியைத் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தேவையான அளவு எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

உலரவைத்த கீழாநெல்லியையும் மிளகையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். கீழாநெல்லி இலை கிடைக்கவில்லையென்றால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பொடியை 100 கிராம் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களைக் கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும். 21 நாள்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel 
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.