மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடிக்கடி மயக்க உணர்வு ஏற்படுகிறதா? இதோ அருமருந்து

அதிகப்படியான பித்தத் தன்மையினால் அடிக்கடி மயக்க உணர்வு உண்டாவதைத் தடுக்க இந்த அருமருந்து உதவும்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 8:00 am

தினமணி

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறு - 100 மி.லி

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு. -  100 மி.லி

பசும் பால்.   -   60 மி.லி

பசும் நெய்.  -  60  மி.லி

செய்முறை

முதலில் தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் கரிசலாங் கண்ணிக் கீரையை  எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

சுத்தப் படுத்திய கீரைகளை அரைத்து தனித்தனியாக  மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்துள்ள இரண்டு கீரைச் சாறுகளை ஊற்றி அதனுடன் பசும் பால் மற்றும் பசும் நெய் மேற்கூறிய அளவுச் சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து மிதமான வெப்ப நிலையில் மெதுவாகக்  காய்ச்சி அதன் மெழுகு  பதமான பக்குவத்தில்  இறக்கி கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

கை  கால்களில் உண்டாகக் கூடிய எரிச்சலைப் போக்கவும்.

அதிகப்படியான பித்தத் தன்மையினால் அடிக்கடி மயக்க உணர்வு உண்டாவதைத் தடுக்கவும்.

தீராத நாட்பட்ட வெள்ளைப்படுதல் குறைபாடுகளைத் தீர்க்கவும்  உதவும்.

சாப்பிடும் முறை

இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த பொன்னாங்கண்ணி கீரைத் தைலத்தை மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

முதல் 48  நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.