திருப்பரங்குன்றம்,ஏப்.20: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மயில்கள் உணவுக்காக வெளியே செல்வதைத் தடுக்க, இயற்கைச் சூழ்நிலையில் குளம் மற்றும் தானிய மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மயில்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என கோயில் அதிகாரி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படைவீடாக சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்தின்கீழ் இசை நீரூற்று, திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பணிகள் ரூ 3.87 கோடியில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளின் ஒருபகுதியாக, கோயில் அருகே வனப்பகுதியில் அரியவகையான நான்கு வெள்ளை மயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகின்றன. இவற்றிற்கு போதுமான இரை இல்லாமல் இருப்பிடத்தைவிட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.
இதனைத் தடுக்கும் பொருட்டு தற்போது பூங்கா அமைக்கும் பணியோடு மயில்கள் தண்ணீர் குடிக்க இயற்கையான முறையில் குளம் அமைக்கவும், இரைக்காக தானிய மேடையும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயில்களை பொதுமக்கள் பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாக அதிகாரி இரா.செந்தில்வேலவன் கூறியது:
""மயில்கள் இரைக்காக வெளியே செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் மயில்கள் சில நேரங்களில் வெறிநாய்களால் கடிபட்டு இறந்துள்ளன. இந்த நிலையைப் போக்க வனப்பகுதியிலேயே இயற்கையான முறையில் குளங்களையும், தானிய மேடையையும் அமைத்துள்ளோம்.
தற்போது நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் பூங்கா கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன், பாதுகாப்பு வேலி அமைத்து பொதுமக்கள் மயில்களைப் பார்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


