ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கிக் கிளை ஒன்றில் ரூ.3.13 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கோடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரபுல்ல குமார் கூறியது:
சந்தீப் சிங் அத்வல் (32) மற்றும் அவரது மனைவி ரமஞ்சீத் கெüர் (29) ஆகிய 2 பேரும் இணைந்து ஆர்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினர். பாங்க் ஆப் பரோடா வங்கியின் ராம்புரா கிளையில் இருவரும் தலா ரூ.26.5 லட்சம் கடன் வாங்கினர். பின்னர், அதே வங்கியில் வீட்டு மனையின் பேரில் அத்வல் மேலும் ரூ.2.6 கோடி கடன் வாங்கி உள்ளார். ஆனால் அந்த மனை 8 ஆண்டுகளுக்கு முன்பே விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக அத்வலின் தந்தை அஜீத் சிங் மற்றும் அவரது உறவினர் ரகுவீர் சிங் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான அத்வல் மற்றும் ரமஞ்சீத் ஆகிய 2 பேரை தேடி வருகிறோம் என்றார் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

