இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஹெலிகாப்டர் பேர ஊழல்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய

Updated On :2 மார்ச் 2013, 1:27 am IST

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதுதொடர்பாக, வழக்குரைஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ. ஹெலிகாப்டர் பேர ஊழலை விசாரிக்கக் கூடாது என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது சி.வி.சி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்ததுடன் மனுவைதள்ளுபடி செய்தனர்.

முக்கிய பிரமுகர்களுக்கான சொகுசு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின் மெக்கனிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெற ரூ.360 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டே புகார் எழுந்தது. எனினும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த புகார் தொடர்பாக, ஃபின் மெக்கனிக்கா நிறுவனத்தின் தலைவர் கியூசெப் ஒர்சி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.