ஒடிசா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் தலைவரான எஸ்.சி. ஜமீர் ஒடிசா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார்.
ஆளுநராக பதவி வகித்த முரளிதர் சந்திரகாந்த் பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ஜமீர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டார்.
நாகாலாந்து: நாகாலாந்து ஆளுநராக சி.பி.ஐ. முன்னாள் இயக்குநரான அஸ்வினி குமார் பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், அஸ்வினி குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


