ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் சர்ச்சைக்குரிய ஆங்கில கட்டுரைத் தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடிமைப் பணித் தேர்வில் ஆங்கில கட்டுரை தாளுக்கு
100 மதிப்பெண்கள் அளிக்கும் பகுதி புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) திட்டத்தை மத்திய கடந்த வாரம் நிறுத்தி வைத்தது. இந்த புதிய ஆங்கிலத் தாள் நீக்கப்படுவதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி புது தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து மக்களவையில் அவர் கூறியிருப்பது: 100 மதிப்பெண்களுக்கான ஆங்கில கட்டுரை தாள் நீக்கப்படுகிறது. ஏற்கெனவே இருந்த முறைப்படி ஏதேனும் ஓர் இந்திய மொழி அல்லது ஆங்கிலத்தில் 300 மதிப்பெண்கள் உள்ள இரு தாள்கள் என்ற நிலை மீண்டும் பின்பற்றப்படும்.
250 மதிப்பெண்கள் உள்ள கட்டுரைத் தாளை தேர்வு எழுதுபவர் விரும்பும் மொழியில் எழுதலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் அல்லது ஆங்கிலத்தில் தேர்வை எழுதலாம்.
ஒரு மொழியில் குறைந்தபட்சம் 25 பேராவது தேர்வை எழுத முன்வந்தால் மட்டுமே அம்மொழியில் தேர்வெழுத இயலும் என்கிற விதிமுறை கைவிடப்படுகிறது. ஒருவரது பட்டப்படிப்பின்போது குறிப்பிட்ட மொழியில் இலக்கியம் படித்திருந்தால் மட்டுமே அம்மொழி இலக்கியத்தை யு.பி.எஸ்.சி. தேர்வில் விருப்ப பாடமாக எடுக்கலாம் என்ற விதிமுறையும் கைவிடப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் எம்.பி.க் கள் நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய ஆட்சேபங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

