திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் சென்னை வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சோதனை நடத்தியதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ-யின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசிய மன்மோகன் சிங், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டுள்ள இந்த வேளையில் அக்கட்சித் தலைவரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்
தியுள்ளது. இந்த சோதனை நடத்தப்பட்ட நேரம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக அறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சோனியா காந்தி அழைத்துப் பேசினார்.
அப்போது அவரிடம் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை குறித்து சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார். இத்தகவலை செய்தியாளர்களிடம் ஷிண்டே பின்னர் கூறினார்.
மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமியிடமும் சிபிஐ செயல்பாடு தொடர்பாக சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்ததாக அவரது அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

