சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலைக் குறைப்புக்குப் பிறகு, தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.901.50க்கு விற்கப்படுகிறது. இது கடந்த மாதம் ரூ.904.50க்கு விற்கப்பட்டது. மானியம் வழங்கப்படும் சிலிண்டர் மீதான நஷ்டம் ரூ.439லிருந்து ரூ.434.50 ஆகக் குறையும்.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு சிலிண்டருக்கு ரூ.6.50 குறைந்துள்ளது. இனி மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் ரூ.891.50க்குக் கிடைக்கும். கடந்த மாதம் ரூ.898-க்கு விற்கப்பட்டது. எரிவாயு சிலிண்டர் விலை மும்பையில் ரூ.912 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.926.50 ஆகவும் குறைந்துள்ளது
மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுப்பாடு கொண்டு வந்தது. இதன்படி ஆண்டுக்கு ஒரு வாடிக்கையாளருக்கு 6 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும் என்றும், கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோர் சந்தை விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
எனினும், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்துவதாக ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.
ஒரு மாதம் முழுவதும் நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப, மானியம் அல்லாத சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பறவை கண்காணிப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தேசிய உயிரியல் பூங்காவின் முன்முயற்சி!
கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை கோரி புளியறையில் சாலை மறியல்: 35 போ் கைது

தவெகவுடன் கூட்டணியா? கட்சி தலைமை முடிவு செய்யும் துரை வைகோ
ஜஹாங்கீா்புரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


