கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஹூப்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அத்வானி, செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் பாஜக அரசு சிறந்த ஆட்சியை அளித்துள்ளது. முதல்வர்களாக சதானந்த கெüடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய இருவரும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த அரசாட்சியை அளித்துள்ளனர். இதை மனதில் வைத்து கர்நாடக மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.
எனவே, கர்நாடகத்தில் பாஜக தன்னுடைய அரசை தக்கவைத்துக் கொள்ளும். பாஜக அரசின் சாதனைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம். கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
நேரு காலத்தில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 தான் மிகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார். ஆனால் ஆட்சி நிர்வாகத்தை மற்றொருவரான சோனியா காந்தி நடத்தி வருகிறார். பெயரளவுக்குத்தான் மன்மோகன்சிங் பிரதமர். உண்மையான பிரதமராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
அதிகாரம் படைத்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். இப்படிப்பட்ட ஊழல் அரசுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமிப்பதற்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அத்வானி, இதுபற்றிய விவாதம் தேவையற்றது.
கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இதுபற்றிய விவாதம் நடைபெறாததால், அதுபற்றி கேள்வியே எழவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் தகுந்த நேரத்தில் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


