சி.பி.ஐ.க்கு சுதந்திரம், தன்னாட்சி அதிகாரம் கிடைப்பது, நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே நடக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சி.பி.ஐ.க்கு சுதந்திரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்காது என்றும், அது நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே நடக்கும் என்றும் கருதுகிறேன். எனது 37 ஆண்டு அரசுப்பணி அனுபவத்தில், மாநிலங்களில் போலீஸாரின் செயல்பாடுகளில் அரசியல் தலையீட்டைப் பார்த்திருக்கிறேன். இப்போது எனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இப்போது நீதிமன்றத்தின் கண்டனம் காரணமாக நல்லது நடப்பது மகிழ்ச்சி தருகிறது. அதாவது, சி.பி.ஐ.க்கு செயல்பாட்டுத் தன்னாட்சி அதிகாரம் அளிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சியெடுத்து வருகிறது.
சி.பி.ஐ. அமைப்பு என்பது முழுச் சுதந்திரம் பெற்றது அல்ல என்பதில் சந்தேகமே இல்லை. "யாரும் அதிகாரம் செலுத்தாமல் சி.பி.ஐ. செயல்படுகிறது' என்று யாராவது கூறினால் அது முழுப் பொய்தான். சி.பி.ஐ. செயல்பாட்டில் தலையீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வெளியார் குறுக்கீடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்ட முதல் சி.பி.ஐ. இயக்குநர் நான்தான். உண்மையைப் பேச வேண்டும் என்பதிலும் அனைத்துத் தகவல்களையும் அளிக்க வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தலைமையகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாவதாக, தொலைபேசி மணி தொடர்ந்து அடிப்பது நின்றது. ஏற்கெனவே பல தரப்பட்ட நபர்களும் என்னைத் தொலைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருப்பார்கள்.
இப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் தொலைபேசி அழைப்புகள் (அவுட்கோயிங்) மட்டுமே செய்யப்படுவது குறித்து எனது அலுவலகப் பணியாளர்களே சிரித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் சி.பி.ஐ. கூண்டுக்கிளி என்று மக்கள் நகைச்சுவையுடன் பேசுகின்றனர்.
சி.பி.ஐ. அமைப்பின் சுதந்திரத்துக்காக சட்ட வரைவை உருவாக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. நானும் இச்சட்ட வரைவுக்கான ஆலோசனைகளைப் பட்டியலிடுவதற்காக சி.பி.ஐ. அமைப்புக்குள்ளேயே ஒரு குழுவை அமைத்துள்ளேன். அந்தப் பட்டியலைப் பின்னர் அரசிடம் ஒப்படைப்போம். இந்தக் குழுவில் முன்னாள் சி.பி.ஐ. தலைவர்களும், சில சட்ட நிபுணர்களும் இடம்பெறுவார்கள் என்றார் ரஞ்சித் சின்ஹா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


