எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கறைபடியாத நபர்களுக்கு வாக்களியுங்கள் என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம், பித்ரோகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொதுமக்கள் தேர்தலின் போது தங்களுக்குள்ள வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். கறைபடியாத நபர்கள், எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வாக்களியுங்கள். அரசியல் கட்சிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை.
கட்சி அடிப்படையிலான நடைமுறை நமது நாட்டு அரசியல் முறைக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்காகத்தான் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்காக இல்லை. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் சாசன சட்டத்தையே ஆக்கிரமித்துக் கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முறை இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.
கிராம சபைகள், கிராம சுயராஜ்ஜியம்தான் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ஆனால் அரசியல்வாதிகள் இவற்றை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்றார் ஹசாரே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா?

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



