74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தமிழ்நாடு

தமிழ்நாடு பேரவையில் ஆளுநர் உரை! - செய்திகள் நேரலை

ஆளுநர் உரை செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

தமிழ்நாடு பேரவையில் ஆளுநர் உரை! - செய்திகள் நேரலை

ஆளுநர் ஆர்.வி. ஆா்லேகர் - tndipr

Updated On :18 ஜூன் 2026, 10:45 am IST
5:15 am, 18 ஜூன் 2026

36 நிமிட ஆளுநர் உரை

தமிழ்நாடு ஆளுநரின் 36 நிமிட உரை, திருக்குறளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசித்து வருகிறார்.

5:09 am, 18 ஜூன் 2026

கடன் இருமடங்கு

தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடனானது இரு மடங்கு அதிகரித்ததையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

5:09 am, 18 ஜூன் 2026

மேக்கேதாட்டு அணை

கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

5:09 am, 18 ஜூன் 2026

இருமொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஆளுநர் வாசித்து வருகிறார்.

5:08 am, 18 ஜூன் 2026

பாரபட்சம்

மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை எவ்வித மாற்றமும் திருத்தமும் இன்றி ஆளுநர் ஆர்லேகர் வாசித்து வருகிறார்.

4:56 am, 18 ஜூன் 2026

தவெகவுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது என்று ஆளுநர் பாராட்டு.

4:55 am, 18 ஜூன் 2026

ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்!

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் உரையை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றி வருகிறார்.

4:36 am, 18 ஜூன் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

4:36 am, 18 ஜூன் 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

4:27 am, 18 ஜூன் 2026

ஆளுநர் வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.வி. ஆா்லேகரை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன், அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையனும் இருந்தார்.

தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

4:23 am, 18 ஜூன் 2026

யாரையும் விமர்சிக்க வேண்டாம்! ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்!

4:17 am, 18 ஜூன் 2026

முதல்வர் வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகை தந்துள்ளார்.

4:17 am, 18 ஜூன் 2026

வாயை திறங்க சிஎம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ’வாயை திறங்க சிஎம்’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர்.

4:17 am, 18 ஜூன் 2026

இபிஎஸ்ஸுக்கு 5-வது இருக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வரிசையில் 5-வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

4:17 am, 18 ஜூன் 2026

விசிக கேள்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

4:17 am, 18 ஜூன் 2026

சா்ச்சை தொடருமா...?

சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா். 

4:10 am, 18 ஜூன் 2026

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.