மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை எவ்வித மாற்றமும் திருத்தமும் இன்றி ஆளுநர் ஆர்லேகர் வாசித்து வருகிறார்.
நிதி பங்கீட்டில் தமிழ்நாடுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக இடம்பெற்ற வரிகளை எவ்வித மாற்றமும் இன்றி வாசித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஆளுநர் வாசித்து வருகிறார்.
அதேபோல், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடனானது இரு மடங்கு அதிகரித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இருக்கும் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் பெயர், திராவிடம் என்ற வார்த்தை, மத்திய அரசுக்கு எதிரான வரிகளை வாசிக்காமல் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Central Government partiality - Governor reads out the government address without change
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





