முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் உரையை சுட்டிக் காட்டி ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், வணக்கம் எனத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். அப்போது, ’ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்’ என்ற அண்ணாவின் உரையை குறிப்பிட்டு பேசினார்.
மேலும், அவர் பேசியதாவது:
”தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பயனடையும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிட்டார்.
Summary
In a democracy, the people are the heroes - Governor cites Anna's speech.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





